தமிழ் தலைமைகள் எங்கே?கட்டுவன் மயிலிட்டி வீதி திறக்கப்படவில்லை?

கட்டுவன் மயிலிட்டி வீதியை விடுவித்ததாக தெரிவித்து மீண்டும் தனியார் காணியின் ஊடாகவே பாதை ஏற்படுத்தியுள்ளதனால் காணி உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலி. வடக்கில் இருந்து ஏப்பிரல் 13ம் திகதி 683 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலங்களிற்கான வீதியின் 700 மீற்றர் தூரம் இராணுவத்தின் பிடியிலேயே கானப்பட்டது. இவ்வாறு இராணுவத்தினரிடம் கானப்படும் வீதியை விடுவித்து உதவுமாறு கோரிக்கை விடப்பட்டது. 
இதன் பிரகாரம் இந்த மாதம் ஆரம்பத்தில் குறித்த வீதி விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 700 மீற்றர் தூரத்தில் 300 மீற்றர் தூர வீதியே விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சிய 400 மீற்றர் வீதியும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதனால் விடுவிக்கம்பட்ட நிலங்களிற்கான பாதை இல்லாத காரணத்தினால் பல நிலங்களின் உரிமையாளர்கள் செய்வதறியாது தின்றுகின்றனர்.
இதேநேரம் விடுவிக்கப்பட்ட நிலங்களின் முன்னே இருந்த ஓர் பெரிய வெள்ள வாய்க்காளின் ஒரு பகுதியும் இராணுவத்தினரின் பிடியில் இருப்பதனால் வெள்ள வாய்க்காலும் சீர் செய்ய முடியாத தன்மையே கானப்படுகின்றது.
 இவற்றின் காரணமாக அப் பகுதியில் மக்கள் தமது வாழ்விடங்களை பெரும் தொகை நிதியில் சீரமைக்கின்றபோதும் உடன் குடியேறுவதற்கான சூழல் அற்ற தன்மையே கானப்படுகின்றது.
எனவே குறித்த 400 மீற்றர் வீதி மற்றும் வெள்ள வாய்க்கால் பகுதிகளையும் படையினர் விடுவிப்பதன் மூலமே கட்டுவன் பிரதேசத்தில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் மீள் குடியேற்றம் முழுமை பெற முடியும் என அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.