தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், கடுகன்னாவவில் தென்னங் கொப்பு தலையில் வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் நேற்று இரவு கடுகன்னாவ - இலுக்குவத்த, ரம்மலக பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் ரம்மலக பிரதேசத்தினை சேர்ந்த 45 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

மேலும், சீரற்ற காலநிலையினால் மக்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.