கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக களமிறங்கிய கமல் ஹாசன்!

சென்னை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் 3 மாதங்களுக்கு முன், தலைமைச் செயலாளர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அமைச்சர்களுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எந்தவித ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர துணை நிலை ஆளுநர் பைஜால் எந்தவித முயற்சியும் எடுக்காமல், தூண்டிவிடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ’ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் குறுக்கிடுவது ஏற்புடையதல்ல.
டெல்லியிலும், தமிழ்நாட்டில் அல்லது புதுச்சேரியிலும் நிகழ்ந்து கொண்டிருப்பது முற்றிலும் வேறானது. மாற்றத்தை விரும்பும் பொதுமக்களுக்கு, இந்த செயல் மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும்’ என்று கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
Powered by Blogger.