கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் கையளிப்பு!

ஜனாதிபதி செயலகத்தினால் 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை விளையாட்டு மைதானம் (18) ஜனாதிபதியால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்ரோபர் 14 ஆம் திகதி ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்கள் கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்காக வருகை தந்த போது கனகபுரம் பாசடாலை சமூகத்தினரால் பாடசாலை விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடப்பட்டது.
அதற்கமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் பத்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு நேரடியாக விமானப்படையினரிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டு அவர்களால் புனரமைப்புச் செய்யப்பட்டது.
சுற்று மதில் அமைத்தல், மைதானத்திற்கு புல் பதித்தல் உள்ளிடட பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று மாணவர்களின் பயன்பாட்டுக்கு ஜனாதிபதியினால் கையளிக்ப்பட்டுள்ளது.
Powered by Blogger.