மண்ணெண்ணெய்யின் விலையைக் குறைக்கத் தீர்மானம்!

மண்ணெண்ணெய்யின் விலையை 25 தொடக்கம் 30 ரூபாவால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும்”இவ்வாறு இராஜாங்க அமைச்சர் டிலீப் வீரஆராச்சி தெரிவித்தார்.


மண்ணெண்ணெய்யின் விலை கடந்த மே 10ஆம் திகதி 57 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

அதனால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

மீனவர்கள் மற்றும் சமுர்த்திக் குடும்பங்களுக்கு பழைய விலையிலேயே மண்ணெண்ணெய் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மண்ணெண்ணையின் விலையை 25 தொடக்கம் 30 ரூபாவால் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.