சமூக தொண்டு நிறுவனங்களும் தமிழர்களும்!

புலம்பெயர் தேசத்தில் வாழும் ஈழ தமிழ் குடும்பங்களின் எண்ணிக்கை அண்ணளவாக 13 லட்சம்
இதில் சுயநலமாக வாழும் குடும்பங்கள் என்று எட்டு இலட்சத்தை எடுத்து விடுவோம்.


இன்னும் கடன், உதவி செய்ய முடியாமல் வாழும் குடும்பங்கள் என்றும் தமது சுமையை கொண்டு சுமக்கமாட்டாத குடும்பம் என்றும் அண்ணளவாக 4.5 லட்ஷத்தை எடுத்து விடுவோம்
ஈழத்தில் வறுமையில் வாடும் குடும்பங்களை நாம் கவனத்தில் கொண்டால் கிட்டதட்ட 150000 குடும்பங்கள் வரும் என்போம். இதில்
பழைய பாடசாலை மாணவர்களின் சங்கங்களின் பெயரால் உதவி பெறும் குடும்பங்கள் என்று அண்ணளவாக 25000 குடும்பங்களை
(எனக்கு தெரிஞ்சு பிரித்தானியாவில் மட்டும் அண்ணளவாக 132 பழைய மாணவர்கள் சங்க பாடசாலைகள் இயங்குகின்றது....அப்படியாயின் உலகம் முழுவதும் கருத்தில் கொள்ளுங்கள்

அப்படியே கிராம நலன்புரிச்சங்கங்கள், தமிழ் சங்கங்கள் தனிப்பபட்ட உதவிகள் என்று அண்ணளவாக 25000 குடும்பங்களை கருத்தில் கொள்ள முடியும்.
அதுமட்டுமன்றி சமூக சேவை அமைப்புக்கள் என்ற பெயரிலே வெளிநாட்டில இருக்கின்ற அமைப்புகள் எல்லாம் சேர்ந்து உதவி செய்யும் குடும்பங்கள் கிட்டதட்ட 50000
அதனைவிட பெரிய வர்த்தக முதலைகள் தாம் செய்யும் சமூக தொண்டு என்று சொல்லி விளம்பரம் செய்யும் குடும்பங்கள் அண்ணளவாக 50000 என்று கூறலாம்
சரி உதவி செய்ய விருப்பமான குடும்பங்கள் என்று 50000 குடும்பங்களை வைத்து கொண்டாலும்
ஈழத்தில் இருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
அண்ணளவாக 150000

அண்ணளவாக
பழைய மாணவர் சங்கங்கள் உதவி: 25000
கிராமிய நலன்புரி சங்கங்கள்,
கிராமிய தமிழ் சங்கங்கள் : 25000
சமூக தொண்டு நிறுவனங்கள் @ 50000
வர்த்தக சமூக அமைப்புகள் @ 50000
தனிப்பட்ட குடும்பங்களின் உதவிகள்@ 50000
ஆக தேவைக்கு அதிகமான உதவிகள் கிடைக்கப்பெற்றும் இன்றும் வறுமை தாண்டவம் ஆடுவதாக கூறப்படும் நிலையினை கருத்தில் கொண்டு அனைத்து சமூக செயற்பாட்டில் ஈடுபடும் நிறுவனங்களும் தனியார் குடும்பங்களும் ஒரு குடையின்கீழ் ஒன்றிணைத்து தாம் உதவிசெய்யும் குடும்பங்களின் தரவுகளை உள்ளக பரிவர்த்தனையில் பரிமாற்றம் செய்வதுடன் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பவும் ஆவன செய்தல் அவசியமாகின்றது. இதனை கருத்தில் கொண்டு செயற்படுவார்களா எமது சமூக அமைப்புக்களும் தனியார் குடும்பங்களும்??
காவியா
08/06/2018
20.51
லண்டன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.