முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் ஒன்று கூடல்!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பெண்களின் ஒன்று கூடல் இன்று இடம்பெற்றது. மக்கள் மன்றம் என தலைப்பிடப்பட்ட குறித்த பெண்கள் மாநாடு இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் அனுபவங்கள் பகிரப்பட்டன.

நுண்கடன், போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கெதிரான வன்முறைகள், பெண்களிற்கான அரசியல் பிரவேசம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இதன் பின்னர் அனந்தி சசிதரன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

நிகழ்வில் உரையாற்றிய அனந்தி சசிதரன்,

பெண்கள் இன்று பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்த வருகின்றனர். அதிகமான பெண்கள் நுண்டன் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த திட்டத்தினை மத்திய அரசும், மத்திய வங்கியுமே நிறுத்த முடியும். இவ்வாறான நுண்கடன் திட்டங்களிற்கு பதிலாக கிராம மட்டங்களில் பல்வேறு இலகு கடன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கிராம மட்ட அமைப்புக்கள் அவற்றை தமது உறவினர்களிற்கு முன்னுரிமையாக வழங்குவதால் உண்மையான தேவை உடையோர் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.