அதிகாரத்தை தக்க வைக்க முயற்சி நடைபெறுகிறது!

தற்போதைய அரசாங்கம் அரசியல் அமைப்பை மாற்றி, தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.


வரகாபொல, தல்லியத்த பகுதியில் அமைந்துள்ள ஆனந்த போதி விவேக செனசுனவின் புதிய 3 மாடி கட்டிடத்தை நேற்று (16) திறந்துவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
Powered by Blogger.