மன்னாரில் மீண்டும் எலும்புகூடு அகழ்வு பணி ஆரம்பம்!

மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 11 ஆவது நாளாகவும் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ஆகியோர் குறித்த இடத்துக்கு நேரடியாகச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த அகழ்வு பணிகள் சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினராலும், களனி

பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

No comments

Powered by Blogger.