மன்னாரில் மீட்கப்பட்ட மர்ம பொதியில் இரத்தக் கசிவு!

மன்னாரில் இன்று மாலை சந்தேகத்திற்கிடமாக கட்டப்பட்ட நிலையில் பொதி ஒன்று காணப்பட்டுள்ளது.சௌத்பார் புகையிரத நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் வீடு ஒன்றுக்கு அருகில் எனினும், பிரதேச மக்கள் அது தொடர்பில் எந்த கவனமும் செலுத்தவில்லை.


ஆனால், இன்று மதியம் குறித்த பொதியினுள் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த மக்கள், அருகில் சென்று பார்த்த போது பொதியில் இருந்து இரத்தம் சிந்துவதை கண்டு அச்சமடைந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த பொதி தொடர்பாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் பொதியினை அவிழ்த்து பார்த்த போது அடித்து கொல்லப்பட்ட நாய் ஒன்றின் சடலம் அதில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.