மன்னார் இளைஞன் மலேசிய சிறையில் உயிரிழப்பு!

இலங்கை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசிய நாட்டுச் சிறையில் உயிரிழந்துள்ளார்.


மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

உயிரிழந்தவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ஜூட் மயூரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சினைகள் இருந்ததாகவும், இதுவே அவரின் உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மலேசியாவுக்குச் சென்று தஞ்சம் கோரியவர் என தெரிவிக்கப்படுகிறது.
Powered by Blogger.