மயிலிட்டி தென்மயிலை வீரபத்திரர் ஆலய புனரமைப்புக்கான நிர்வாக தெரிவு!

வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குள்ளிருந்து 28 வருடங்களின் பின்னா் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தென்மயிலை வீரபத்திரா் ஆலய புனரமைப்புக்கான புதிய நிா்வாக தொிவு 28 வருடங்களின் முதன் முறையாக இன்று நடைபெற் றுள்ளது. இந்த நிா்வாக தொிவில் ஆலய புனரமைப்புக்கான நிா்வாக குழுவின் தலைவராக பேராசிாியா் நா.சண்முகலிங் கன் தோ்வு
செய்யப்பட்டுள்ளாா்.

பல நூற்றாண்டுகளுக்கு பழமை வாய்ந்ததும், வசந்தன் கூத்துப் பாடல்களும் பிரசித்தி பெற்றது சிறப்புக்களும் கொண்ட மயிலிட்டி தெற்கு கட்டுவன் (தென்மயிலை) ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலயம் இராணுவ கட்டுப்பாட்டு இருந்து ஏப்ரல் 14 அன்று விடுவிக்கப்பட்ட நிலையில்

கடந்த 30 வருடங்களாக எந்த பூசை வழிபாடுகளின்றி உருக்குலைந்து காணப்படும் இவ்வாலயத்தை மீள புனர்நிர்மானம் செய்து, பூசை வழிபாடுகள் தொடருவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் முகமாக புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.15 மணியளவில் ஆலய சூழலில் இடம்பெற்றது.

இக்கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆலயத்தில் பொங்கல் செய்துடன் ஆறுமுகக் குருக்கள் மற்றும் அருணாசலக் குருக்களால் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து இவ்வாலயத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஆரம்பமாகியது.

இதில் தலைவராக  கட்டுவனை சேர்ந்த முன்னாள் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்
நாகலிங்கம் சண்முகலிங்கம் அவர்களும்,உபதலைவராக முருகேசு சிவப்பிரகாசம் அவர்களும், உப செயலாளராக குருசாமி சுகுமார் அவர்களும்,செயலாளராக தம்பிராசா வேலாயுதம் அவர்களும், பொருளாளராக பூதத்தம்பி சிவராசாஅவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

மேலும் நிா்வாகசபை உறுப்பினா்களாக நேசபூபதி நாகராசா, உதயசுதர்சினி குணநேசன், நமசிவாயம் விக்னேஸ்வரன், தம்பிராசா கந்தசமி, ந.உதயதாஸ், கு.கோகுலன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இக்கோயிலை அடுத்தகட்டமாக பதிவுசெய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதுடன் மற்றெரு கூட்டமும் விரைவில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தில் இப்பகுதி மக்கள் மற்றும் ஆலய நிர்வாக உறுப்பினர்கள், ஆலய குருக்களும் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.