அர்ஜூண மகேந்திரனின் கடன் நிலுவையை செலுத்திய மென்டிஸ் நிறுவனம்!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூண மகேந்திரனின் கடன் அட்டை நிலுவைத் தொகையை டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் 3.2 மில்லியன் ரூபா கடன் அட்டை நிலுவைத் தொகையை காசோலைகள் மூலம் டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை சட்ட மா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (07) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்தால் கிடைக்கப்பெற்ற 3 மில்லியன் ரூபாய் காசோலைகள் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காசோலைகள் இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளால் பணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பீ அறிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட காசோலைகள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Powered by Blogger.