போட்டியின்றி நடிகர் சங்க தலைவராகிறார் மோகன்லால்!

கேரளாவில் மலையாள நடிகர், நடிகைகள் சங்கம் ‘அம்மா’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்திற்கு மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

கடந்த 17 வருடங்களாக மலையாள நடிகர் சங்க தலைவராக மலையாள குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக இன்னசெண்ட் பதவி வகித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சாலக்குடி தொகுதி எம்.பி ஆகவும் உள்ளார்.
இன்னசெண்ட் நடிகர் சங்க தலைவராக மிக திறமையாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். மலையாள நடிகை கடத்தல் வழக்கில் கூட அதை திறமையாக கையாண்டு திலீபனை பிடிக்க செயல்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெற்றுவரும் அவர் குணமடைந்து வருகிறார். மேலும் அவரின் முதுமை, உடல்நலக்குறைவு காரணங்களால் அவர் நடிகர் சங்க தலைவர் பொறுப்பு பதவியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளார்.
தலைவராகும் மோகன்லால் ;

இந்நிலையில் ‘அம்மா’ தலைவராக மலையாள ஜாம்பவான்களான மோகன்லால் அல்லது மம்மூட்டி ஆகிய இருவரில் ஒருவர் வர வேண்டும் என மலையாள திரையுலகின்றர் விருப்பப்படுகின்றனர்.
இதையடுத்து புதிய நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மோகன்லால் மனு கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து வேறு யாரும் அந்த பதவிக்கு விண்ணப்பிக்காததால் மோகன்லால் போட்டியின்றி நடிகர் சங்க தலைவர் ஆக உள்ளார். இதனால் மோகன்லால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

No comments

Powered by Blogger.