மனைவியும் தாயும் கணவனால் வெட்டிக்கொலை!

ஹங்வெல்ல – வெலிகன்ன பகுதியில் கணவன் தன் மனைவியையும் தாயையும் வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் எனவும், சாமர யசோத பண்டார எனும் நபரே இந்த கொலையை செய்திருக்க கூடும் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதன் போது உயிரிழந்தவர்கள் 68 வயதுடைய ரூபசிங்க ஆரச்சிகே மேரி ராணி மற்றும் 38 வயதுடைய செனரத் லியனகே லக்மினி ஶ்ரீயாகாந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தன் மனைவியையும், மனைவியின் தாயையும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 4 மாத குழந்தையை மீட்ட பொலிஸார் வைத்திசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.No comments

Powered by Blogger.