நீட் தேர்வில் தோல்வி – மேலும் ஒரு மாணவி தூக்கு போட்டு தற்கொலை!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து 1,14,602 பேர் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 39.55 சதவீத தேர்ச்சி ஆகும். 

தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அளவில் இவர் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.  

இதற்கிடையே, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். கூலித்தொழிலாளியின் மகளான பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன். இவரது மகள் சுபஸ்ரீ. இவர் நீட் தேர்வில் 94 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த சுபஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.