பேரறிவாளனை கருணைக் கொலை செய்து விடலாம் என தாயாரின் உருக்கம்!

பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால், அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என்று ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்து, தனது அதிருப்தியை அற்புதம்மாள் வெளியிட்டார்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது. திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது எனத் தெரியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் கடந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.Powered by Blogger.