சனத் நிஷாந்த பெரேராவை கைது செய்ய பிடிவிராந்து!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேராவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவிராந்து ஒன்றை சிலாபம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் சிலாபம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கிற்கு ஆஜராகாத காரணத்தால் சிலாபம் நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதியான மஞ்ஜுள ரத்னாயக்கவினால் இன்று (07) இந்த பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த பெரேரா மற்றும் அவரது சகோதரரான ஆரச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்த பெரேரா ஆகிய இருவரும் நேற்று (06) காலை சிலாபம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகிய போது மேல் நீதிமன்ற நீதிபதி சுகயீனம் காரணமாக விடுமுறை எடுத்திருந்ததால் சிலாபம் மேல் நீதிமன்ற பதிவாளர் அஜித் நிஹால் ஜயசிங்கவினால் குறித்த வழக்கு ஆகஸ்ட் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி அப்போது இருந்த ஆராச்சிகட்டுவ பிரதேச செயலாளரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

No comments

Powered by Blogger.