பௌத்­தர்­க­ளை­யும் கள­மி­றக்கிப் போராடுவோம்!

இரா­ணு­வத்­தி­ன­ருக்கு எதி­ராக அரசு முன்­னெ­டுத்த அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­பட்­ட­மைக்கு ஞான­சார தேர­ருக்குக் கிடைத்த பரிசு சிறை­த்தண் டனை. இது குறித்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க ஆகி­யோர் கவ­னத்­தில் கொள்­ள­வில்லை என்­றால் ஒட்­டுமொத்த பௌத்­தர்­க­ளை­யும் வீதி­யில் இறக்கி போராட தயா­ராக உள்­ள­தாக பொது பல சேனா எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

ஹோமா­கம நீதி­வான் நீதி­மன்­றுக்கு முன்­னால் நேற்று முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்ட மகால் கந்த சுகத தேரர் ஊட­கங்­க­ளுக்கு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

பௌத்த பிக்­கு­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் முற்­றாக ஒழிக்­கப்­ப­டும் வரை எமது போராட்­டத்தை நிறு­தப்­போ­வ­தில்லை. ஞன­சார தேரர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும், எதிர்­கா­லத்­தில் அவர் இல்­லா­மல் போனா­லும் அவ­ரது குரல் என்­றும் ஓயப்­போ­வ­தில்லை.

பிக்­கு­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­ப­டும் நட­வ­டிக்­கை­கள் நிறுத்­தப்­ப­டும் வரை எமது போராட்­டம் ஓயப்­போ­வ­தில்லை. அதே­வேளை இன்று முதல் புதிய வகை­யில் எமக்­கான நீதிக்­காக போராட்­டங்­களை முன்­னெ­டுக்­கத் தீர்­மா­னித்­துள்­ளோம்.

இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளின் கார­ண­மா­கவே கடந்த தேர்­த­லில் அரசு பெரிய தோல்­வி­யைச் சந்­திக்க நேர்ந்­தது. அது மாத்­தி­ர­மல்ல எதிர்­வ­ரும் தேர்­த­லி­லும் அரசு தோல்­வி­யையே சந்­திக்­கும் என்­ப­தில் மாற்­றம் இவ்லை.

ஞன­சா­ர­தே­ரர் விரை­வில் விடு­தலை செய்­யப்­ப­டு­வார். அதற்­காக எந்த மட்­டத்­தி­லும் சென்று போராட நாம் தயா­ரா­க­வுள்­ளோம். இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் அவர்­க­ளு­டைய செயற்­பா­டு­கள் பற்றி பேசு­வதை நிறுத்­தப்­போ­வ­து­மில்லை. அதனை யாரா­லும் நிறுத்­த­வும் முடி­யாது – என்­றார்.No comments

Powered by Blogger.