சாக்கடையில் விழுந்த லாரி!

SBS Transit லாரி ஒன்று, சாக்கடையில் விழுந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.


சாங்கி சவுத் லேனை நோக்கிச் செல்லும், பெடோக் நார்த் அவென்யு 4ல் சம்பவம் ஏற்பட்டது.

SBS Transit லாரி ஒன்று, சாக்கடையில் விழுந்ததைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

நேற்று மதியம் 12.30 மணி அளவில் சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

லாரியில் இருந்த அந்த இரண்டு ஆடவர்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டதாக படை கூறியது.

லாரியை ஓட்டிய 57 வயது ஆடவரும், அவருடன் பயணம் செய்த 29 வயது ஆடவரும் சுயநினைவோடு, சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்தாகக் காவல் துறை தகவல் அளித்தது.

சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்றும், சம்பவத்தில் மற்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், SBS Transit நிறுவனம் தெரிவித்தது.
Powered by Blogger.