ஈழ அகதிகளை திருப்பி அழைப்பது தொடர்பில் இந்திய அரசுடன் பேச்சு!.

ஈழத்தில் இருந்து கடல்மார்க்கமாக இந்தியாவிற்குச் சென்ற அகதிகளை தாயகம் அழைத்து வருவது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் இந்தியத் தூதுவரைச் சந்திப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக தாயகத்தில் இருந்து இடம்பெயர்ந்து் இந்தியாவில் முகாம்களிலும் வெளியிலும் தங்கியுள்ள ஈழ அகதிகள் தற்போது இந்தியாவில் எதிர்கொள்ளும் நெருக்கடி நிலமை காரணமாக அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் திரும்ப முடியாது மீண்டும் ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்டே  தாயகம் திரும்புகின்றனர்.

இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 படகுகள் மூலம் மொத்தம் 24 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். எனவே தமிழ்நாட்டில் முகாம் மற்றும் வெளியில் தங்கியிள்ள ஈழ அகதிகளில் தாயகம் திரும்ப எண்ணுவோரை அவர்களிற்கு உள்ள முக்கிய இடர்பாடுகள் மூன்றினையும் போக்கு இலகுவான பயணத்திற்கு வழி சமைப்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் தற்போது நேரம் கோரப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் தற்போது விடுமுறையில் சென்றுள்ளதனால் நாடு திரும்பியதும் குறித்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என இந்தியத் தூதரகம் கூட்டமைப்பிற்கு பதிலளித்துள்ளது.

இதேநேரம். குறித்த விடயம் தொடர்பில் உடன் ஓர் தீர்வை எட்டுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ந.லோகதயாளன்  கடந்த மாதம் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரிடம் ஓர் வேண்டுகையை கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.