ஸ்டொ்லைட் ஆலையில் ரசாயனக் கசிவா?

ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து ரசாயனக் கசிவு ஏற்பட்டதாக வெளியான தகவலையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


வேதாந்தா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது மக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடா்ந்து ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழக முதல்வா் பழனிசாமி சட்டமன்றத்தில் ஆணைப் பிறப்பித்தார். இந்நிலையில் ஆலையில் இருந்து ரசாயன கசிவு வெளியேறுவதாகத் தகவல் வெளியானதை அடுத்து அங்கு அதிகாரிகள் குழு ஆய்வு செய்யவிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், "ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு உள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து ஆலையில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்த இருக்கிறது. ஆலையால் எவ்வித பாதிப்பும் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம். தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறது. ரசாயன கசிவு தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

Powered by Blogger.