'சிங்கப்பூர் எங்கே?' என்று தேடிய அமெரிக்கர்கள்!

உலக வரைபடத்தில் ஒரு சிறிய சிவப்புப் புள்ளி சிங்கப்பூர். இந்த வாரம் நடந்த டிரம்ப்-கிம் உச்சநிலைச் சந்திப்பிற்கு முன்னர், பல அமெரிக்கர்களுக்கு உலகத்தின் எந்த மூலையில் சிங்கப்பூர் உள்ளது என்பது தெரியவில்லை.


சந்திப்புக்கு பிறகு அந்த நிலைமை மாறியது.

'உலகத்தில் சிங்கப்பூர் எங்குள்ளது' என்பதை கூகுளில் தட்டச்சு செய்த அமெரிக்ககர்கள், சிங்கப்பூரின் இருப்பிடத்தை கடந்த சில நாட்களில் இணையம் வழி கண்டுபிடித்தனர்.

சிங்கப்பூர் பற்றி ஜூன் 10ஆம் தேதி ஆக அதிகமாக கூகுளில் தேடப்பட்டது. 40 விழுக்காட்டு அமெரிக்கர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு உள்ளது. மேலும், அவர்கள் அதிகமாக அருகில் இருக்கும் கனடா மற்றும் மெக்சிகோவிற்குச் செல்வதுண்டு.

இதனால் தென்கிழக்காசியா பற்றியும் குறிப்பாக சிங்கப்பூர் பற்றியும் அவர்கள் அறிந்திராமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.