சுமந்திரன் ஐ.தே.கவின் இணைந்து தனித்து கட்சி ஆரம்பிக்க முயற்ச்சி!

சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராவது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.


ஜனநாயக மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட தலைமை பணிமனையை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சுமந்திரன் தமிழரசுக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நான் ஒரு சாஸ்திரகாரன் அல்ல.

எனினும் எதிர்வரும் தேர்தலில் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவே பங்கு கொள்வார் என்பதை உறுதியாக கூற முடியும்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் கூறினால் சுமந்திரன் ஒற்றைக்காலில் கூட நிற்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.