யாழில் பொலிஸார் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி! பதற்றம்!

சுன்னாகம் பகுதியில் இரு இளைஞர்கள் குழுக்கள் வாள்களுடன் தாக்கிக்
கொண்டதை அடுத்து பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மல்லாகத்தைச் சேர்ந்தவர் என்றும் சுமார் 28 வயதுடையவர் என்றும் தெரியவருகின்றது.
அந்தப் பகுதியில் தற்போது பதற்ற நிலைமை காணப்படுகின்றது. உயிரிழந்தவரின் உடல் தெல்லிப்பழை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.மல்லாகம் சகாயமாதா கோவில் பெருநாள் இன்று மாலை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த சேர்ந்த 4534 என்ற இலக்கமுடைய பொலிஸ் அதிகாரி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டினால் குறித்த இளைஞன் உயிரிழந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலய பெருநாளில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.Powered by Blogger.