இந்தியாவை குறிவைக்கும் ஹாலிவுட் பிரபலம்!

ஸ்பைடர்மேன் : ஹோம்கமிங் படத்தில் பணியாற்றியிருந்த காஸ்ட்யூம் டிசைனர் இந்தியப் படங்களில் பணிபுரிய வேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவித்திருக்கிறார்.


கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங்’ படத்தில் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றியவர் பிரபல காஸ்ட்யூம் டிசைனர் லூயிஸ் ஃப்ரோக்லி. ஸ்பைடர்மேன்: ஹோம்கமிங்குக்கு மட்டுமில்லாமல் ஆன்ட் மேன் அண்ட் தி வாஸ்ப் படத்திற்கு அவர் செய்திருந்த காஸ்ட்யூம் டிசைனிங்காலும் ரொம்பவே பேசப்பட்டார். தற்போது விண்வெளியை மையமாக வைத்து உருவாகி வருகிற புதிய படத்தில் இவர் பணியாற்றி வருவதால் படம் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.

இந்நிலையில் ஐ.ஏ.என்.எஸ்ஸுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியப் படங்களில் தான் பணிபுரிய ரொம்பவே ஆவலாக இருப்பதை தெரிவித்துள்ளார்,

இதுபற்றி மேலும் பேசிய அவர், “இந்தியாவும், இந்திய ஆடைகளும் எனக்கு ரொம்பவே பிடித்தமான ஒன்று. இந்தியாவின் ஃபேஷன் எப்போதும் அழகானதும் அற்புதமானதும்கூட. அதுபோல எனக்கு மிகப்பிடித்தமான ஒரு நாடு இந்தியா. எனவே இந்தியாவில் ஒரு படத்தில் நான் பணியாற்ற வேண்டும் என ரொம்பவே ஆசையாகவே உள்ளது. இந்தியாவில் நான் படம் பண்ணினால் அதை மிகப் பெருமையாகக் கருதுவேன்” என்றார்.
Powered by Blogger.