மஸ்தானுடன் இணைந்து செயலாற்ற தயார்-டி.எம்.சுவாமிநாதன் !

மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி அலுவல்களுக்கு பிரதியமைச்சராக காதர் மஸ்தானை நியமிப்பது குறித்து எனக்கு எந்தவித அதிருப்தியும் இல்லை. அவருடன் இணைந்து செயலாற்ற முடியும் என்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.


மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தானை நியமித்தமை தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கு அறிவித்திருப்பதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சுக்கான பிரதியமைச்சர் நியமனம் தொடர்பில் அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்துமத அலுவல்களுக்கு வேற்று மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரை நியமித்திருப்பது குறித்து ஊடகங்கள் வாயிலாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர் என்ற ரீதியில் தன்னிடமும் சில ஊடகவியலாளர்களும், அமைப்புக்களும் கேள்வி எழுப்பியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பில் எந்தவொரு அதிகாரமும் அமைச்சர் என்ற ரீதியில் தனக்கு இல்லை என்றும், நியமன அதிகாரியாக ஜனாதிபதி இருப்பதால் அவருக்கு இது குறித்து அறிவிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோவுக்கு இது சம்பந்தமாக அறிவித்திருப்பதாகவும் அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய பிரதியமைச்சர் நியமனம் தொடர்பில் திருப்திகரமான பதிலை ஜனாதிபதியின் செயலாளர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.