தூத்துக்குடி தொடர் படுகொலை யாழில் அரங்கேற்றம்??

தூத்துக்குடி தொடர் படுகொலை தொடராக இலங்கையில்தெல்லிப்பளையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


சகாய மாதா ஆலயப் பெருநாளில் கலந்துகொள்ள சென்ற இளைஞர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேவாலயத்தில் திரண்டிருந்த மக்கள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், கே.கே.எஸ். வீதி ஊடான போக்குவரத்து சகாய மாதா ஆலயத்துடன் தடைப்பட்டுள்ளது.

தேவாலயத்தை சுற்றி தெல்லிப்பளை, சுன்னாகம் பொலிஸார் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இருகுழுக்கள் மோதலில் ஈடுபட்டதாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அதனை மறுக்கும் பொதுமக்கள் பெருநாளில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
Powered by Blogger.