மயிலிட்டி துறட்டையிட்டி ஞானவைரவர் ஆலய பொதுக்கூட்டம்.!

பல நூற்றாண்டு காலமாக இக்கிராம மக்களுக்கு  அருள்பாலித்து வந்த சிறப்பு   மயிலிட்டி தெற்கு  (தென்மயிலை) கட்டுவன் சந்தி துறட்டையிட்டி ஞானவைரவர்  ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து  ஏப்ரல் 14 அன்று விடுவிக்கப்பட்டது.  

இந்நிலையில்  இவ்வாலயம் பூசை வழிபாடுகள் இன்றி உருக்குலைந்து காணப்படுகிறது.  எனவே  மீள புனர்நிர்மானம் செய்து, பூசை வழிபாடுகள் தொடர்வதற்கான  செயற்பாடுகளை 
மேற்கொள்ளும் முகமாக புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை (19)ஆம் திகதி   முற்பகல் 10 மணிக்கு  ஆலய முன்றலில்   நடைபெறவுள்ளது.
ஆகவே இக்கூட்டத்தில்  ஞான வைரவர் அடியார்கள், ஆலயத் தொடர்பாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.  
தற்போது இக்கோயிலை சூழ்ந்திருந்த மரங்கள் பற்றைகள் வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.