கர்நாடகாவில் காலா படம் ரிலீசாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் !

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம், இன்னும் சில தினங்களில் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் காலா
திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தற்போது நிலவி வருகிறது. தூத்துக்குடி பிரச்சனையில் ரஜினி கூறிய கருத்தால் தமிழர்களும், காவிரி பிரச்சனையில் அவர் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதால் கன்னடர்களும், காலாவை திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதில் கர்நாடகாவில் ரஜினியின் காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அந்த தடையை நீக்க கோரி பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது, காலா படக்குழு. இந்நிலையில் கர்நாடகாவில் காலா படம் ரிலீசாகும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கர்நாடக நீதி மன்றத்தில் மனு செய்திருந்தார் தனுஷ்.
அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், காலா படத்தை வெளியிட திரையரங்கிற்கு உத்தரவிடமுடியாது என கூறி தீர்ப்பளித்திருக்கிறது. காலா திரைப்படத்திற்கு கன்னடர்கள் தெரிவித்திருக்கும் இந்த எதிர்ப்பிற்கு காரணம், ரஜினி காவிரி பிரச்சனையின் போது தமிழர்களுக்கு ஆதரவாக பேசியது தான். என தெரிவித்திருக்கும் கன்னடர்கள், காலா இங்கு ரிலீசானால் திரையரங்குகளில் அதகளம் செய்துவிடுவோம் என்றும் மிரட்டி இருக்கின்றனர்.
இதையே காரணமாக கூறி இருக்கும் கர்நாடக முதல்வர் குமாரசாமி , காலா-வை கர்நாடகாவில் திரையிடாமல் இருப்பதே நல்லது என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை திரையிடுவதால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு தயாரிப்பாளர் தான் முழு பொறுப்பு என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கும் தனுஷிற்கு, மறைமுகமாக தனது எதிர்ப்பை இதன் மூலம் காட்டி இருக்கிறார் குமாரசாமி.
Powered by Blogger.