வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா!

வவுனியா - தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகியுள்ளது.இந்த நிகழ்வு, இன்று காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10.00 மணிக்கு தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து விநாயகப்பெருமான் ,வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் மற்றும் அம்பிகையின் வீதியுலாவும் நடைபெற்றுள்ளது.மேலும், இன்றைய முதலாம் நாள் திருவிழாவின் போது அம்பிகை இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.

Powered by Blogger.