எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது!

சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி’ என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார்.


சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் பட விளம்பரம் வெளியாகியுள்ளது. இதில், என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை, என் சாவு சொம்பு தூக்குற ஜால்ராங்க கையிலும் இல்லை. கடவுள் என் கூட இருக்கும் வரை எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகருடன் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர்.

இப்படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Powered by Blogger.