பிரித்தானியாவில் மூடப்படும் வங்கிக்கிளைகள்!

பிரித்தானியாவில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டு வருகின்றன. 2015-ல் இருந்து 2018 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 2900 வங்கி கிளைகள்
மூடப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராததால் வங்கிகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து மாதந்தோறும் 60 கிளைகள் வரை மூடப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் வங்கிக்கிளைகளை மூடுவதின் வேகம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

2014-க்கு பிறகு பொதுமக்கள் வங்கிக்கு வருவது 40 சதவீதம் குறைந்து இருக்கிறது. அதே நேரத்தில் பொதுமக்கள் இணையதளம் மூலம் வங்கி பரிவர்த்தனைகள் செய்வது 73 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இங்கிலாந்தின் முன்னணி வங்கியான நோத்வெஸ்ட் வங்கி மட்டுமே தமது 635 கிளைகளை மூடி இருக்கிறது.

எச்.எஸ்.பி.சி. வங்கி 440 கிளைகளையும், லொய்ட்ஸ் வங்கி 366 கிளைகளையும் மூடி இருக்கின்றன. நாட்டிலேயே ஸ்கொட்லாந்து பகுதியில்தான் அதிக அளவில் வங்கிகள் மூடப்பட்டு இருக்கின்றன.

இந்நிலையில் இணையதளம் வங்கி நடைமுறை வந்ததற்கு பிறகு பல நாடுகளிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.