வடகொரியா இனி அணுவாயுத அச்சுறுத்தலாக இருக்காது!

வடகொரியா இனி அணுவாயுத அச்சுறுத்தல் கொடுக்காது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அவர் தமது டுவிட்டர் பதிவில் அதனைத் தெரிவித்தார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடன் கலந்துபேசியது மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

கொரியத் தீபகற்பத்தில் முழுமையான, உறுதிப்படுத்தக்கூடிய, மாற்றமுடியாத அணுவாயுதக் களைவை நிறைவேற்றுவதில் அமெரிக்கா கடப்பாடு கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.
Powered by Blogger.