சுதந்திர கட்சிக்குள் பிளவு!

தொடர்ந்தும் கூட்டு அரசாங்கத்தில் சுதந்திர கட்சி நீடிக்குமாயின், அதில் இருந்து விலகுவதா? அல்லது தொடர்ந்தும் இருப்பதா? என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுபபினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இந்த விடயம் தொடர்பில் கட்சியின் அதிருப்திக் குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத மக்கள்வாத ஆட்சியொன்றை ஏற்படுத்துவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அவர் கூறினார்.

இதற்கமைய, அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் கொண்ட குழுவில் ஒரு சிலரிடையே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்தக் கலந்துரையாடலை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் சந்திம வீரக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை காரணமாக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் எதிர்க்கட்சியுடன் இனைத்து மக்களுக்கு சேவையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் கட்சியை பிளவு படுத்தாமல், கட்சியின் நன்மை கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த முடிவுகளை எடுப்பார் என தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.No comments

Powered by Blogger.