தகுந்த பதிலடியினை விசுவமடு மக்கள் கொடுத்துள்ளார்கள்-அட்மிரல் சரத் வீரசேகர!

தமிழ் மக்களை பகடைக்காயாக்கி இனங்களுக்கிடையே விரோதங்களை ஏற்படுத்தி வந்த வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், சிவாஜிலிங்கத்துக்கும் தகுந்த பதிலடியினை விசுவமடு மக்கள் கொடுத்துள்ளார்கள் என அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவத்தினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக அபகரித்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்ற அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இவ்வாறான அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு இன்று வன்னி விசுவமடு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.

யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கூட நாட்டை பிரிக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை. அவர்கள் ஒன்றிணைந்து வாழவே விரும்புகின்றனர். ஆனால் இவர்களின் விருப்பத்திற்கு சில தமிழ் அரசியல்வாதிகள் தடையாகவுள்ளனர்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளை நிறைவேற்ற முடியாத நிலையிலும் அவர்கள் நாட்டைப் பிரிக்கும் அரசியலமைப்பினை பற்றியே பேசுகின்றனர். மறுபுறம் பாதிக்கப்பட்ட மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி தமது அரசியல் இருப்பினையும் இவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ளனர் என்றார்.
Powered by Blogger.