புங்குடுதீவில்9வயது மகளைச் சீரழித்த தந்தை!

புங்குடுதீவு பகுதியில் 9 வயதுடைய மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வரும் ஒருவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து 9 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சில தினங்களாக இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.