கதிரைக்கு ஆசைப்படும் டெனீஸ்வரன்!

வட மாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியே தீருவேன் என அடம்பிடிக்கும் பா.டெனீஸ்வரன்,  இன்று  வடமாகாணசபை அமர்வுகள் நடக்கவுள்ள நிலையில், அவையில் தனக்கு
அமைச்சர்களிற்குரிய ஆசனம் ஒதுக்கப்பட வேண்டுமென டெனீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

மீண்டும் அமைச்சராகி விட வேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருக்கும் டெனீஸ்வரன், மாகாணசபைக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய வழக்கு விசாரணையின் போதும், அடுத்த இரண்டு வாரங்கள் வரை ஆளுனருக்கான அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், டெனீஸ்வரனை அமைச்சராக மீள நியமிப்பதில் முதலமைச்சர் தரப்பிற்கு ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதையும் 23ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றையதினம், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை தொடர்பு கொண்டு, தனக்கும் அமைச்சர்களிற்குரிய ஆசனம் ஒதுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த தகவல் ஆளுனர் செயலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  அதற்கான சாத்தியங்கள் கிடையாதென்றே தெரிகிறது. ஏனெனில், அவைத்தலைவரிற்கு நீதிமன்ற உத்தரவோ, ஆளுனரின் உத்தரவோ இதுவரை அனுப்பப்பட்டிருக்காத நிலையில், அவர் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் நாளை டெனீஸ்வரனின் கதிரை ஆசையும் சாத்தியமாக வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

இதேவேளை, வடக்கு ஆளுனருக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடந்த சில நாட்களின் முன்னர் ஒரு கடிதம் அனுப்பியிருந்ததாக ஆளுனர் செயலக வட்டாரங்கள் சற்று முன்னர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். அமைச்சரவை மாற்றங்கள், குழப்பங்கள் குறித்த தகவல்கள் எதுவும் அவைத்தலைவரான தனக்கு தெரியப்படுத்தப்படவில்லையென அதில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனேகமாக இன்று  அவையில், அவைத்தலைவரின் விசனம் எதிரொலிக்கலாமென தெரிகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.