யாழில் கிராம சக்தி வலையமைப்பு!

யாழ்மாவட்டத்தில் பிரதேச மற்றும் கிராம ரீதியில் சேவைகளை முன்னெடுப்பதற்காக சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் தலைமையின் கீழ் அபிவிருத்தி குழு வலையமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனால் பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டத்திற்கு சிறந்த வலையமைப்புடன் கூடிய செயற்திட்டத்தினை செயற்திறனாக முன்னெடுப்பதற்காக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு வலையமைப்பில் பல்வேறுதுறை சார்ந்தவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை கிராம மக்களினது தேவைகளையும் உரிய முறைமையில் அறிந்து சேவைகளாக தொடர்வதற்கு சிறந்த வலைப்பின்னலாக அமையும் என்று பிரதி அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.


கிராம சக்தி வேலைத்திட்டமானது யாழ் மாவட்டத்தில் பிரதேச ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாடுகள் குறித்து பிரதேச ரீதியாக சிறந்த வலையமைப்புக்களை உருவாக்கிக்கொள்ள விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதனுடைய பிரத்தியேக செயலாளர் சதாசிவம் இராமநாதனால் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.


இவ்வாறான பாரிய வலையமைப்புக்களை உருவாக்குவதன் மூலமும் சிறந்த தொடர்பாடுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிறந்த கிராம ரீதியிலான பிரதேச கட்டமைப்புக்களை உருவாக்கிக் கொள்ளலாம் என சதாசிவம் இராமநாதன் தெரிவித்தார். 
Powered by Blogger.