தமிழ்த் தேசிய நீக்கம் செய்ய களமிறக்கப்பட்ட ஜக்கியதேசிய கட்ச்சி முகவரே சுமந்திரன்!

2009ம் ஆண்டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல், தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதே தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி.டி.பி, புளொட்,
மற்றும் வல்லரசு நாடுகள் மற்றும் சிங்கள பேரினவாத கட்சிகளின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த திட்டத்தை கையாயும் பொறுப்பு ஒரு தேசியவாதி அல்லாத யுஎன்பி மனோநிலையுடைய சுமந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று (25) தமிழ்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

2009ம் ஆண் டு மே மாதம் போர் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பது மட்டுமல்லாமல், தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்வதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட ஈ.பி.டி.பி, புளொட், மற்றும் வல்லரசு நாடுகள் மற்றும் சிங்கள பேரினவாத கட்சிகளும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்றை கொண்டுவந்தன. இந்த சதியை நாங்கள் 2010ம் ஆண்டு தொடக்கம் கூறிவந்திருக்கிறோம். அதனை நாங்கள் ஊகத்தின் அடிப்படையில் கூறியிருக்கவில்லை. 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் கூட்டமைப்புக்கள் இருந்து பார்த்த, கேட்ட விடயங்களின் அடிப்படையில் கூறியிருந்தோம்.

இதன்படியே தமிழ்தேசிய கூட்டமைப்பு தமிழ் அரசியலில் இருந்து தமிழ்தேசிய நீக்கத்தை செய்யும் வேலைத்திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே ஆரம்பித்தார்கள். அதன் ஊடாக ஆட்சி மாற்றம் ஒன்றை கொண்டுவந்து அதன் பின்னர் உத்தியோகபூர்வமாக புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் விரும்பி ஏற்கவேண்டும். என்பதே இந்த திட்டமாகும்.

இந்த திட்டத்தை கையாள இரா.சம்மந்தன் தலமையில் ஒரு தேசியவாதி அல்லாத ஒரு நபரை தேர்வு செய்து அவருக்கு முக்கியமான பங்குகள் கொடுக்கப்பட்டு தமிழ்தேசிய நீக்கத்தை செய்யும் பொறுப்பும் அவரிடமே கொடுக்கப்பட்டது. அந்த நபர் வேறு யாருமல்ல. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே. சுமந்திரன் ஒரு தேசியவாதி அல்ல. அவர் யூ.என்.பி போக்கு கொண்ட ஒருவராவார். அவர் வல்லரசு நாடுகள் மற்றும் சிங்கள தேசியவாதத்தின் நலன்களுக்காக செயற்பட இரா.சம்மந்தனின் ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதிதான் புதிய அரசியலமைப்பாகும்.

2018ம் ஆண்டு உள்ளுராட்சிசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கண்டிருந்த பாரிய பின்னடைவுக்கு பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அது மீளவும் எடுக்கப்படாது. என நம்பியிருந்த நிலையில் கடந்த ஒரு வார கலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் மீளவும் தொடங்கப்பட்டிருக்கின்றது. இதன் பின்னால் உள்ள விடயங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் சீன அரசின் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அரசியலமைப்பு உருவாக்கத்தில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அதனை இந்த அ ரசாங்கம் செய்வதே பிரச்சினை எனவும், தாம் ஆட்சிக்கு வந்தாலும் இதனை செய்து கொடுப் போம். இல்லையேல் உங்களுடைய மக்களே உங்களை தூக்கி எறிவார்கள். அங்கே பலமான மாற்று தலமை உருவாக்கி கொண்டிருக்கின்றது. என கூறியிருக்கின்றார்.

ஆகவே மஹிந்தராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பு உருவாக்கத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. அவருக்கு இருப்பதெல்லாம் அரசியல் போட்டி மட்டுமேயாகும். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ஷ தானும் ஆட்சியில் இருந்தால் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றி தருவேன் என கூறுகிறார் என்றால். வருகிற அரசியலமைப்பு ஒரு சமஷ்டி அரசியலமைப்பு அல்ல. அது அப்பட்டமான ஒற்றையாட்சி அரசியலமைப்பு என்பது இன்று அம்பலப்பட்டிருக்கின்றது. இதனையே நாங்கள் தேர்த ல் காலத்திலும் கூறினோம். சிங்கள தேசத்தின் நலன்களுக்கு சார்பாக தமிழ் தலமைகள் செய ற்படுவதை சிங்கள தலைவர்கள் எதிர்க்கப்போவதில்லை. என்பதை மஹிந்த ராஜபக்ஷ மீண்டு ம் உறுதிப்படுத்தியிருக்கின்றார். ஆகவே தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேலைத்திட்டம் என்பது ராஜபக்ஷ சீன சார்பாளர் என்பதை காட்டிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றை சிங்கள மக்கள் மத்தியில் நிரந்தரமாக இடம் பிடிக்கவைப் பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு கடுமையாக முயற்சிக்கிறது.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் பல தடவைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான போக்கை காட்டியிருக்கிறது. ஆக மொத்தத்தில் தமிழ் மக்களுடைய நலன்கள் என்பது இன்றைக்கு இந்த அரசை காப்பாற்றுவதற்கும், மஹிந்த போன்ற சீன சார்பாளர்கள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்குமாகவே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எனவே தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டு புதிய அரசியலமைப்பை அடியோடு நிராகரிக்கவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.