இலங்கை குறித்து மீண்டும் ஓரு சர்ச்சை !


இலங்கை மீதான பிரேரணையை
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை வாபஸ்பெறவேண்டும் என அமெரிக்காவும் பிரிட்டனும் கேட்டுக்கொள்ளவேண்டும் என பிரிட்டனின் நேஸ்பி பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐக்கியஇராச்சியத்தின் நாடாளுமன்றத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னரே வேர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
பிரிட்டனும் அமெரிக்காவும் பல அநீதிகளை இழைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் சித்திரவதையையும்,மோசமாக நடத்தப்படுவதையும் கண்டிக்கவேண்டும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் அதனை தூண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனோர் விவகாரம்,புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குதல்,சுயாதீன உண்மை மற்றும் நல்லிணக்க குழுவை ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை விலக்கிக்கொள்ளுமாறு மனித உரிமை பேரவையை கோரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்காவும் பிரிட்டனும் தங்கள் நடவடிக்கைகள் ஐநா பிரகடனத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரானவை என்பதை உணரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நேஸ்பி பிரபு மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் நெருங்கிய உறவுகளை கொண்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.