ஊட்டியில் பிரபல நடிகரின் மகனுடைய திருமணம் நிறுத்தம்?

பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன்
மஹக்சய் சக்கரவர்த்தியின் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி திரை உலகில் 1980-களில் கொடி கட்டி பறந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் சினிமாவில் மாட்டுமல்லாமல் பல நட்சத்திர ஓட்டல்களை நடத்தி வருகின்றார். தமிழகத்தில் ஊட்டி, மசினகுடி பொக்கா புரம் பகுதியில் இவருக்கு நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.
திருமணம் நிறுத்தம் :
மிதுன் சக்கரவர்த்தி தனது மகன் மஹக்சய் திருமணத்தை ஊட்டியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் தன் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடத்த திட்டமிட்டிருந்தார். இதை ஊடகங்களுக்கு தெரியவேண்டாம் என விருப்பப் பட்டார்.
இந்நிலையில், மஹக்சய் சக்கரவர்த்தி தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஏற்கனவே ஒரு நடிகை புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
அந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் ஊட்டிக்கு விரைந்து மஹசாயின் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து மிதுன் சக்கரவர்த்தியின் உறவினர்கள் ஊட்டியை விட்டு கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது. 
Powered by Blogger.