இராமாயணத்துடன் தொடர்புபட்ட புனித தளங்களை தரிசிப்பதற்கு வசதியாக ரயில் சேவை

இந்திய ரயில்வே  சரித்திர முக்கியத்துவம் மிக்க இராமாயணத்துடன் தொடர்புபட்ட புனித தளங்களை தரிசிப்பதற்கு வசதியாக ரயில் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில் சேவை  ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சுற்றுலா ரயில் சேவையாக பெயரியப்பட்டுள்ளது.இந்த ரயில் சேவையை எதிர்வரும் நவம்பர் மாதம் 14ம் திகதி  ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இராமர் பிறந்த இடமான அயோத்தியில் இருந்து ஆரம்பமாக உள்ள இந்த ரயில் சேவை சீதையை சிறைவைத்திருந்த இலங்கையில் இராவணன் வாழ்ந்த பகுதி வரையில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான விவரங்களை இந்தியாவில் இருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான்  டைம்ஸ் புத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்த சுற்றுலா ரயில் சேவை 16 நாட்களை கொண்டாதாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இந்தியாவில் டெல்லிக்கு அருகாமையில் உள்ள சப்பிடார்ஜ் (Safdarjung station ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் அயோத்தியில் அனுமான் கர்ஹி (Hanuman Garhi) நிறுத்தப்படும் .இதன் போது கண்ணக் பவான் (Kanak Bhawan)ஆலயத்தை தரிசிப்பதற்கும் ராம்கோட் (Ramkot)  புனித தளங்களை தரிசிப்பதற்கு  இது வசதியாக அமையும்.
ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் Nandigram, Sitamarhi, Janakpur, Varanasi, Prayag, Shringaverpur, Chitrakoot, Nasik, Hampi Rameshwaram. ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.  இந்த பகுதியில் உள்ள புனித வழிபாடு தளங்களை தரிசிப்பதற்கு . வீதிவழியாக பயணித்து வழிப்படுவதற்கான வசதிகள் செய்யப்படும்.
இலங்கையை பொறுத்தவரை சென்னையில் இருந்து கொழும்புக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவத்துவதுடன் நுவரெலியா ,றம்பொடை ,சீதை அம்மன் கோவிலில் தரிசிப்பதற்கும்  சிலாபத்தினுள் உள்ள  புனித தளங்களை தரிசிப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்.
ஸ்ரீ இராமாயண எக்ஸ்பிரஸ் 800 ஆசனங்களை கொண்டது ஒருவருக்கு இந்திய நாணயத்தில் பயணக்கட்டணமாக 15 ஆயிரத்து 120 ரூபா அறவிடப்படும். உணவு உள்ளிட்ட  தங்குமிட  வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகளை இது கொண்டிருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.