தலசீமியா நோய் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டம் ஆரம்பம்

தலசீமியா நோய் காவிகளை இனங்காணும் வேலைத்திட்டமொன்றை சுகாதார
அமைச்சின் தலசீமியா நோய்த் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

2019 முதல் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு என்பு மச்சை சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

8 மாடிகளைக் கொண்ட முழு வசதிகளுடனான என்பு மச்சை சத்திர சிகிச்சை வைத்தியசாலையொன்று அமைக்கப்பட்டு வருவதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார். இதற்காக அரசாங்கம் 8 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது. இந்த வைத்தியசாலை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.