விமல், பிரசன்ன இருவருக்கும்- நாடாளுமன்றத் தடை வரலாம்-!!

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச மற்­றும் பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­
ருக்கு நாடா­ளு­மன்­றம் செல்­லத் தடை விதிக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
முன்­னாள் ராஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னின் கருத்­துத் தொடர்­பில் கடந்­த­வா­ரம் நாடா­ளு­மன்­றில் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது.
இதன்­போது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச மற்­றும் பிர­சன்ன ரண­வீ­ர­வின் நடத்தை தொடர்­பில் சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்ளத் தீர்­மா­னிக்­கப் பட்­டது.
எதிர்­வ­ரும் 11ஆம் திகதி கூட­வுள்ள நாடா­ளு­மன்ற அமர்­வின்­போது இது தொடர்­பில் தீர்­மா­னம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
குறித்த இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டால் அவர்­க­ளுக்­குத் தண்­டனை வழங்­கப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இரு­வ­ரும் குற்­ற­வா­ளி­க­ளா­கப் பெய­ரி­டப்­பட்­டால், உரிய காலப்­ப­கு­தி­யில் நாடா­ளு­மன்­றத்­துக்­குச் செல்­லத் தடை விதிக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை நாடா­ளு­மன்­றத்­தில் இருந்து அகற்ற வேண்­டும் என்று விமல் வீர­வன்ச கோஷம் எழுப்­பி­யி­ருந்­தார். இதன்­போது, குண்டு வைத்து நாடா­ளு­மன்றை அழிக்க வேண்­டும் என்று நீங்­கள் கூறிய கூற்றை மறந்து விட்­டீர்­களா? என்று சபா­நா­ய­கர், வீர­வன்­சவை எச்­ச­ரித்­தி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்கது.
விஜ­ய­க­லா­வைத் தண்­டிக்க வேண்­டும் என்று கூறு­ப­வர்­கள், விம­லின் குண்டு வைத்­துத் தகர்க்க வேண்­டும் என்ற கருத்­துக்­கும் அவர் தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று தெற்கு அர­சி­ய­லில் கருத்து முன்­வைக் கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக் கது.
Powered by Blogger.