ராமரால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது – பா.ஜ.க. எம்.எல்.ஏ.

இந்து கடவுள் ராமர் பூமியில் இருந்தால் கூட பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாது
என்று உத்தரபிரதேச மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னவ் பகுதியில் பெண் ஒருவரை இளைஞா்கள் 3 போ் காட்டு பகுதிக்குள் அத்து மீறி இழுத்துச் சென்றனா். இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினா் சுரேந்திர சிங்க இது குறித்து பேசுகையில், கற்பழிப்பு கருவிகளை ராமரே நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதை என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். சமூகத்தில் அனைவரும் பெண்களை தங்கள் குடும்ப உறுப்பினா்களாக கருத வேண்டும்.
நல்ல நடத்தையின் வாயிலாகவே நாம் இதனை தடுக்க முடியும். இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் அரசியலமைப்பு திறனாக இருக்காது. கொடூரமான குற்றவாளிகள் காவல் துறையினாின் என்கவுண்டா்களில் சமூகத்தை விட்டு வீக்கப்பட்டு விட்டாா்கள். ஆனால், பாலியல் பலாத்கார குற்றவாளிகளை இதுபோன்று நடத்த முடியாது. அவா்களை சட்டத்தின் படி சிறைக்கு தான் அனுப்பப்படுவாா்கள். பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த குழந்தைகள் மத்தியில் ஒழுக்கத்தை கற்பித்தல் என்பது அனைவருடைய பணியாகும் என்று தொிவித்துள்ளாா். 

No comments

Powered by Blogger.