விரைவில் அமைச்சரவை மாற்றம்?

முக்கியமான அமைச்சுப் பதவிகள் சிலவற்றில் விரைவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள்
தெரிவிக்கின்றன.அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை தவறவிட்ட மற்றும் பணிப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றத் தவறிய அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இவ்வாறு பதவி மாற்றங்களுக்கு ஆளாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்கனவே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
பதவி மாற்றத்திற்கு உள்ளாகும் அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
Powered by Blogger.