மண்சரிவு3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாட்டில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல்மடுல்ல, எஹலியகொட பிரதேசங்களுக்கும், நுவரெலிய மாவட்டத்தின் கொத்மலை, அம்பகமுவ பிரதேசங்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளுக்கும் இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் நாள்களில் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.