கொழும்பில் 5ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு திட்டம்!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடத்துவதற்கு மகிந்த ராஜபக்‌ஷ ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
அன்றைய தினம் தமது ஆதரவாளர்களை கொழும்புக்கு அழைத்து வந்து அரசாங்கத்திற்கு எதிரான தமது பலத்தை காட்டவுள்ளதாக அந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்றைய தினத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த ஏற்கனவே திட்டமிட்டிருந்த போதும் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை காரணமாக அதனை 5ஆம் திகதிக்கு ஒத்தி வைக்க அவர்கள் நடவடிக்கையெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

No comments

Powered by Blogger.