போக்குவரத்து துறை பயணிகள் பேருந்துக்கு புதிய விதிமுறை!

பயணிகள் பேருந்தில் தொலைக்காட்சிகளை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எடுத்துள்ள தீர்மானத்தை கொழும்பு மாவட்ட பயணிகள் சங்கம் வரவேற்றுள்ளது.

தொலைக்காட்சி காரணமாக சாரதியின் கவனம் திசை திருப்பப்படுதல் மற்றும் பயணிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படும் வகையிலான காட்சிகள் ஒளிபரப்பப்படுதல் உள்ளிட்ட காரணங்களால் இந்த தடை விதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2010 ஆண்டில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பேருந்துகளில் தொலைக்காட்சிகளை பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எனினும், அந்த திட்டமானது மக்களிடம் எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பை பெறவில்லை.

இந்த நிலையில், பயணிகள் பேருந்தில் தொலைக்காட்சிகளை பயன்படுத்துவதை தடை செய்வதற்கு கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. குறித்த திட்டத்தை மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொழும்பு மாவட்ட பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாடலில் ஈடுபட எதிர்பார்த்துள்ளதாக கொழும்பு மாவட்ட பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

#srilanka  #tamilnews   #bus  #tv

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.